ஜாதகம் என்பது ஒருவரின் கர்மா நன்மையாக உள்ளதா அல்லது தீமை தரப்போகிறதா என்பதை அறிவிக்கின்றது. நாம் முன்ஜென்ம வினையால் நாம் நன்றாக இருக்கிறோமோ அல்லது கஷ்டப்படுகிறோமோ என்பதை கோள்கள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கு உங்களுடைய ஜாதகப் பலன்களை லக்கினம் முதல் 12 பாவகங்களையும் கணித்து சொல்லப்படும்.
ஸ்ரீ சக்ரா ஜோதிஷம்
ஜோதிடம்

ஜாதகம் பார்த்தல்
“ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம்
பதவீம் பூர்வ புண்யாளாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா”
ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில், எந்த இராசி வீட்டில் உள்ளன என்பதனை வரைபடம் போட்டு காண்பிக்கும் ஜாதக கட்டம், மற்றும் அதற்குரிய ஜோதிட குறிப்புகளும் ஆகும். அக் குறிப்பினை வாழ்நாள் ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, ராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர்.
ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து ஜாதக பலன் கூறுவதாகும்.

எண் கணிதம்
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு”
எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளை பிரதிபலித்து காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள எதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன. இத்தகைய எண் கணித சத்திரம் பிரதானமான பலன்களுக்குக் காரணமாக அமைகிறது.
உங்களின் பிறந்த தேதி கொண்டு உங்களின் வாழ்க்கையையும், உங்களுக்கு ஏற்ற தொழிலகள் என்னவென்பதும் கண்டறிந்து செல்லப்படும். பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் ராசி எண்களை கண்டு பெயர்கள் குறித்து தரப்படும்.

ஜாதகப் பொருத்தம்
உங்கள் ராசி பலன்கள்படி உங்களுக்கு பொருந்தும் ஜாதககாரர்கள் யாரென கணித்து கொடுக்கப்படும். உங்களுக்கு பொருந்தும் திருமண வரன்கள், உங்களுடைய தொழில் பொருத்தம் அனைத்தும் துல்லியமாக சொல்லபடுவதாகும். பின்வரும் இரண்டு முறைகளில் ஜாதகப் பொருத்தமானது பார்க்கப்படுகிறது.
திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் இருவரின் ஜாதகத்தையும் ஆய்வு செய்யும் பொருத்தம் ஆகும். நம் நாட்டின் திருமணச் சடங்குகள் தெய்வீகமானவை. பாணிக் கிரகணம் என்பது ஒரு ஆணை நம்பி ஒரு பெண் தனது உடல், உள்ளம், உயிர் இவற்றை அவனிடம் ஒப்படைத்து அவனில் பாதியாவது, மாங்கல்யதாரணம் என்பது மங்களகரமான வாழ்வின் முத்திரை. அம்மி மிதித்தல் மற்றும் அரசாணி சுற்றுதல் இவை இருவரும் சுக வாழ்வு வாழ்வதற்குச் செய்து கொள்ளும் ஒப்பந்தம், அருந்ததி காண்பது தங்களை நல்ல தம்பதிகளாக சமூகத்திற்கு காண்பிப்பது.
திருமணப் பொருத்த ஆய்வு
திருமணப் பொறுத்த ஆய்வானது ஜெனன கால ஜாதகத்தைக் கொண்டு, திருமணப்பொருத்தத்தை நிர்ணயிக்கும் வழிமுறைக் கண்டறிகிறது .திருமணப் பொறுத்த ஆய்வானது ஜெனன கால ஜாதகத்தைக் கொண்டு, திருமணப்பொருத்தத்தை நிர்ணயிக்கும் வழிமுறைக் கண்டறிகிறது . அவை, செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், காலா சர்ப்ப தோஷம், சனி தோஷம், கிரக இணைவுகளால் ஏற்படும் தோஷங்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், விஷக கன்னிகா தோஷம், புனர்பூச தோஷம்.
நட்சத்திரப் பொருத்தம்
திருமணப் பொருத்தத்தை நான்காம் நிலை இந்த நட்சத்திரப் பொருத்தமாகும். தம்பதிகளின் ஜன்ம நட்சத்திரம் மற்றும் ராசியைக் கொண்டு, கணக்கிடும் இந்தப் பொருத்தத்தை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொண்டு ஜாதக ரீதியான பொருத்தங்களாகிய பாவக ஆய்வு , திசாபுத்தி ஆய்வு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தசவித பொருத்தங்கள்
ஒருவரின் ஜென்மராசி மற்றும் நட்சத்திரங்களைக் கொண்டு அறியப்படும் பொருத்தங்கள், அதிக எண்ணிக்கையில் பழம்பெரும் ஜோதிட நூல்களில் தரப்பட்டிருக்கிறது. இருப்பினும் அனைவரும் பின்பற்றக்கூடிய நட்சத்திர பொருத்தங்கள் பதினொன்றாகும். இது பதினொன்றாக இருந்த போதிலும் தசவிதப் பொருத்தங்கள் என்றே அழைக்கப்படுகிறது. அவை, தினபொருத்தம், காணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம் , ராசி அதிபதிப்பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம், நடிப்பு பொருத்தம்.

முகூர்த்த நிர்ணயம்
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல். இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது .
மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது.“நாள் செய்வதை நல்லோரும் செய்யார்” நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும்.
ஹோமங்கள்
தோஷப் பரிகார ஹோமம்
நம் அன்றாட வாழ்வில் பல தடைகள், சோதனைகளை தாண்டி தான் வெற்றியைப் பெறக் கூடிய சூழல் இருக்கிறது. இருப்பினும் நம்மால் யூகிக்க முடியாத சில தடைகள், திருஷ்டி நம்மை தொடரக்கூடும். அதனால் எதனால் நாம் பின்னடைவு அடைகின்றோம் என தெரியாமல் தவித்து வருவோம். கீழே குறிப்பிட்டுள்ள ஹோமங்களை செய்வதால் நாம் தெய்வ சக்திகள் பெற்று அனைத்திலும் வெற்றி பெற முடியும்.
கணபதி ஹோமம் | வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம் | சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் |
மகா மிருத்யுஞ்ஜெய ஹோமம் | ருத்ர ஹோமம் | சண்டி ஹோமம் |
ஸ்வயம்வர கலா பார்வதி ஹோமம் | ஆயுஷ்ய ஹோமம் & நட்சத்திர ஹோமம் | சுதர்ஸன ஹோமம் |
பூவராஹ ஹோமம் | வாஸ்து ஹோமம் | சந்தான கணபதி, சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் |
லெக்ஷ்மி குபேர ஹோமம் – மஹாலெக்ஷ்மி ஹோமம் | சரஸ்வதி ஹோமம் – அஷ்ட சரஸ்வதி ஹோமம் | ஹயக்ரீவ ஹோமம் – அஷ்ட ஹயக்ரீவ ஹோமம் |
அஷ்ட லெக்ஷ்மி, ஷோடச மகா லெக்ஷ்மி ஹோமம் | லெக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் | ம்ருத ஸஞ்சீவி ஹோமம் |
ஸர்வ பாபஹர பர மந்த்ர ஹோமம் | ஸப்த திரவ்ய ஹோமம் | திருஷ்டி துர்கா ஹோமம், சூலிணி துர்கா ஹோமம் |
பிரத்யங்கிரா ஹோமம் | வாராஹி ஹோமம் | பைரவ ஹோமம் ஸ்ரீ அஷ்ட பைரவ ஹோமம் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ஹோமம் |
கந்தர்வ ராஜ ஹோமம் | பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் | தில ஹோமம் |

சாந்தி ஹோமம்
50 ஆண்டுகள் தூக்கத்திலும், 15 ஆண்டுகள் பால பருவத்திலும் செல்ல, மீதமுள்ள 35 ஆண்டுகளே ஒரு மனிதன் நல்வாழ்வுக்கு எஞ்சியிருக்கின்றது. மனிதனாகப் பிறந்தவர்கள் சாந்திகர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும். 100 வயதில் கனகாபிஷேகம் என்னும் பூர்ணாபிஷேகச் சாந்தியும் செய்து கொள்ள வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1 வயதில் (365 நாளில்) அப்தபூர்த்தி சாந்தியும் | 50(ஆரம்பம்) வயதில் வைஷ்ணவி சாந்தியும் |
55 வயதில் வாருணி சாந்தியும் | 60 வயதில் உக்ர ரத சாந்தியும் |
61 வயதில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் | 65 வயதில் மிருத்யுஞ்ஜெய சாந்தியும் |
70 வயதில் பீமரத சாந்தியும் | 75 வயதில் ஐந்திரி சாந்தியும் |
78 வயதில் விஜயரத சாந்தியும் | 80 வயதில் சதாபிஷேகச் சாந்தியும் |
85 வயதில் ரௌத்திரி சாந்தியும் | 90 வயதில் கால ஸ்வரூப சௌரி சாந்தியும் |
95 வயதில் திரயம்பக மஹாரதி சாந்தியும் | 100 வயதில் மஹா மிருத்யுஞ்ஜெய சாந்தியும் |
இவ்வாறு பூரண ஆயுள் பெறும் மனிதன் உலக விவகாரங்களில் ஈடுபடும் போது அவ்வப்போது – ஆங்காங்கு சிறு சிறு தவறுகளும் அனிச்சையாக அல்லது அறிந்தும் தவிர்க்க முடியாத நிலையில் செய்கிறான். இதற்காகவே தன் வயது கணக்கின் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சாந்திகளைச் செய்துகொள்கின்றனர்.

ஜாதக தசாபுத்தி கோச்சார நிவாரத்திகளுக்கு ஜெப பாராயணங்கள் மற்றும் பூஜைகள்
-
- கணபதி பூஜை, கணபதி ஸகஸ்ரநாம பாராயணம்.
- சுப்ரமணிய பூஜை, சுப்ரமணிய ஸகஸ்ரநாம பாராயணம் சத்ரு ஸம்கார திரிசதி பூஜை.
- சிவபூஜை, சிவ ஸகஸ்ரநாம பாராயணம்.
- துர்கா லெக்ஷ்மி, சரஸ்வதி பூஜை மற்றும் ஸகஸ்ரநாம பாராயணம்.
- சத்யநாராயண பூஜை, விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்.
- வாஸ்து பூஜை, நவக்ரக பூஜை.
- திருவிளக்கு பூஜை, லெக்ஷ்மி குபேர பூஜை, லெக்ஷ்மி பூஜை, ஸ்ரீ பகவத் சேவை.
- லெக்ஷ்மி ஹிருதயம், ஆதித்ய ஹிருதயம், பாராயணம்.
- தேவி மஹாத்மியம், பாராயணம்.

தில ஹோமம்
உங்கள் குடும்பத்தில் எவரேனும் அகால மரணம் அடைந்திருந்தால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இந்த ஹோமம் செய்ய வேண்டும். பொதுவாக மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. அதிலும், குறிப்பாக விபத்துகளினால் மரணம் நேரும் போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய முடியாத நிலையை அடைந்து விடுவதால் அந்த உடலுக்கு பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்பிரதாயங்கள் செய்யப்படுவதில்லை. அது போன்ற ஆன்மாக்கள் அந்த அஸ்தி இருக்கும் இடத்தையே ஆவிகளாக மாறி சுற்றிவருகின்றன.
இந்நிலையில், அந்த ஆன்மாவிற்கு மோட்சம் கிடைத்து பித்ரு லோகத்தை அடைய செய்யப்படும் ஹோமமே ‘தில ஹோமம்’ ஆகும்.
சர்ப சாந்தி ஹோமம் – நாக தோஷம் என்றால் பூர்வ ஜென்மத்தில்லோ அல்லது வாழும் காலத்தில் நாகத்துக்கு தீங்கு ஏற்படுத்தியவர்க்கு இந்த தோஷம் இருக்கும் அதை நிவர்த்தி செய்ய இந்த சர்ப ஹோமம் செய்ய வேண்டும்.
திதி – உங்கள் இறந்தஉறவினர்களின் ஆத்மா மோட்சம் அடைய திதி கெடுக்க வேண்டும்.
தர்பணம் – தேவர்களை மனம் நிறைய செய்வதே தர்பணம். அமாவாசை அன்று தர்பணம் செய்வது விசேஷம்
திவசம் – இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ அன்று அவர்களை மானசீகமாக வரவழைத்து உணவளிப்பதுதான் திவசம். இவ்வாறு செய்வதால் நம் பித்ருகளின் ஆசி பெறலாம்.
தோஷ நிவர்த்தி – நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதனால் தோஷம் ஏற்படும் அதனை நிவர்த்தி செய்ய தோஷ நிவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.
பித்ரு தோஷம் – முன்னோர்களுக்கு திதி,திவசம் எதுவும் செய்யாமல் அவர்களை நினையாமல் இருப்பவர்களுக்கு பித்ருதோஷம் ஏற்படும். அது நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷம் – கொடுமையான பாவ செயல்களை செய்வதால் இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அதற்கான பலன் கிட்டாமல் இருக்கும். அது நீங்க பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.
சர்வ பாவ நிவர்த்தி ஹோமம் – மாடுகளைதெய்வமாக வழிபடுவது நம் வழக்கம். கோமா தேவியின் மனம் குளிர செய்வதுதான் சர்வ பாவ நிவர்த்தி ஹோமம். இவ்வாறு செய்வதால் பாவம் நீங்கி அனைத்து வளங்கள் பெற்று வாழலாம்.
குறிப்பு: மேற்கண்ட ஹோமங்கள் அனைத்தும் திருபுல்லாணி மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்தி கொடுக்கப்படும். அனைத்து ஹோமங்களையும் அங்கேயே வந்து நடத்தி கொடுக்க எங்களை அணுகுங்கள்.